SharePoint
A- A A+
NCID > News & Events > News > அர்ப்பணிப்பை வலியுறுத்தும் அன்பான ஆண் தாதி ரங்கநாதன்

அர்ப்பணிப்பை வலியுறுத்தும் அன்பான ஆண் தாதி ரங்கநாதன்

அர்ப்பணிப்பை வலியுறுத்தும் அன்பான ஆண் தாதி ரங்கநாதன்

​செய்யும்‌ தொழிலுக்கும்‌ பாலினத்‌ திற்கும்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ இல்லை என்று உத்வேகத்துடன்‌ கூறுகிறார்‌ ஆண்‌ தாதியான கி. ரெங்கநாதன்‌ (படம்‌). நேர்மையும்‌ அர்ப்பணிப்பு உணர்வும்‌ வேட்கை யும்‌ இருந்தால்‌ எந்தத்‌ தொழிலிலும்‌ யாராலும்‌ சாதிக்க இயலும்‌ என்பது இவரது உறுதியான நம்பிக்கை.

 

தொற்றுநோய்களுக்கான தேசிய சிகிச்சை நிலையத்தில்‌ பணிபுரியும்‌ இவர்‌ தாதியருக்கான சிறப்புத்‌ தகுதி விருதைப்‌ பெற்றுள்ளார்‌.

 

சிறுவயது முதலே புத்தகம்‌ வாசிக்கும்‌ பழக்கம்‌ உள்ள ரெங்கநாதன்‌, “எய்ட்ஸ்‌” நோய்‌ பற்றிய ஒரு புத்தகம்‌ தன்னை மிகவும்‌ பாதித்ததாகக்‌ கூறினார்‌. “எச்‌ஐவி” தொற்றிய நோயாளிகள்மீது காட்‌ டப்படும்‌ பாகுபாடு முறையற்றது என்று உணர்ந்ததால்‌, தாமே தாதி யாகி அவர்களுக்கு உதவ வேண்‌ டும்‌ என்று முடிவெடுத்தார்‌.

 

தற்போது இவர்‌ “எச்ஐவி' தொற்‌ றால்‌ பாதிக்கப்பட்டோரிடையே தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்‌ துவதிலும்‌ “எச்ஐவி' நோயாளிகளுக்‌ குச்‌ சிகிச்சையளிக்கும்‌ சக தாதியருக்கு எளிமையான சிகிச்சை முறைகளைக்‌ கற்றுக்கொடுப்பதி லும்‌ அதிகக்‌ கவனம்‌ செலுத்தி வருகிறார்‌.

 

'ஏன்டிரெட்ரோவைரல்‌ தெரபி' எனும்‌ சிகிச்சைமுறை 'எச்‌ஐவி' தொற்றால்‌ பாதிக்கப்பட்டோருக்கு அதிகம்‌ பயனுள்ளதாக இருக்கிறது என்றும்‌ இம்முறையில்‌ உள்ள சிகிச்‌ சைகளை சரியாகப்‌ பின்பற்றினால்‌ 'எச்ஐவி' நோயாளிகளும்‌ எவ்வித சிரமமும்‌ இல்லாமல்‌ சராசரி வாழ்க்‌ கையை மேற்கொள்ள இயலும்‌ என்‌ றும்‌ தாதி ரெங்கநாதன்‌ கூறினார்‌.

 

நிலையத்தில்‌ 'எச்‌ஐவி' நோயா எிகளுக்கான தாதியர்‌ பராமரிப்பு முறைகளை மேம்படுத்தும்‌ நோக்‌ கில்‌, விளம்பரத்‌ தட்டிகள்‌ மூலம்‌ எளிய முறையில்‌ தாதியருக்குக்‌ கற்பிக்கும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டு வருகிறார்‌. இதே போன்று 'எச்‌ஐவி' தொற்று பற்றிய பல்வேறு தகவல்‌ களையும்‌ சேகரித்து வருகிறார்‌.

 

குறிப்பாக, புதிதாக 'எய்ட்ஸ்‌' நோய்‌ கண்டறியப்படுவோருக்கு ஆரம்பகால சிகிச்சைமுறைகள்‌ பற்‌ றிய தகவல்களை ஒன்றுதிரட்டி கற்றல்‌ வளங்களையும்‌ உருவாக்கி வருகிறார்‌.

 

தொடர்ந்து 10வது ஆண்டாகத்‌ தாதிமைத்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ள 'எச்‌ஐவி' சிகிச்சைமுறையில்‌ அக்கறை செலுத்தும்‌ தாதி கி. ரெங்கநாதன்‌.

 

இவர்‌, “2016ஆம்‌ ஆண்டில்‌ ஒரு 80 வயது மூதாட்டி என்‌ “வார்டில்‌” இருந்தார்‌. நான்‌ அவரை மிகுந்த கனிவுடனும்‌ அக்கறையுடனும்‌ கவ னித்த முறையினால்‌ ஈர்க்கப்பட்ட அவர்‌ என்னை அவருடைய பேரன்‌ என்றே அழைத்தார்‌.

 

“உடல்நிலை மோசமான நிலை யில்‌ வாழ்நாளின்‌ கடைசித்‌ தரு ணங்களை என்னுடனே கழித்தார்‌. புன்னகைத்த நிலையில்‌ அவர்‌ உயிர்‌ என்‌ கண்முன்னே பிரிந்தது. சில நாள்கள்‌ கழித்து அவருடைய மகள்‌ எனக்கு நன்றி கூறி அனுப்‌ பிய கடிதம்‌ வாழ்வின்‌ அர்த்தத்தை எனக்கு உணர்த்தியது,” என்று நெகிழ்வுடன்‌ கூறினார்‌.

 

கொவிட்‌-19 கிருமிப்பரவல்‌ காலத்தில்‌ பாதிக்கப்பட்ட வெளி நாட்டு ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்தது ரெங்கநாதனுக்கு மறக்க முடியாத அனுபவம்‌. அவர்களுடன்‌ தமிழில்‌ உரையாடி மருத்துவர்களி டம்‌ அதனை மொழிபெயர்த்துக்‌ கூறியதால்‌ மேம்பட்ட சிகிச்சை சாத்தியமானது என்றார்‌.

 

அந்தச்‌ சூழலில்‌ பெரும்பாலான நோயாளிகள்‌ மிகுந்த கவலையி லும்‌ மன அழுத்தத்திலும்‌ இருந்த தால்‌ அவர்களைப்‌ பொறுமையுட னும்‌ நிதானத்துடனும்‌ கையாளுவது மிகுந்த சவாலாக இருந்தது என்று குறிப்பிட்டார்‌.

 

தாதிமைத்‌ தொழிலில்‌ கூடுதல்‌ நேரம்‌ பணியாற்றவேண்டி ய சூழல்‌ இருந்தாலும்‌, மனத்திற்கும்‌ உட லுக்கும்‌ போதிய ஒய்வு அளிக்க, நேரத்தை முறையாகத்‌ திட்டமிட்டு வகுப்பதாகக்‌ கூறிய இவர்‌, நோயா எிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை முறைகளுடன்‌ அன்பு, அக்கறை யோடு கூடிய பராமரிப்பையும்‌ வழங்‌ குவதையே தன்‌ வாழ்நாள்‌ லட்சிய மாகக்‌ கொண்டுள்ளார்‌.

 

Read the full article here.
Source: Tamil Murasu © SPH Media Limited. Permission required for reproduction.


















Last Updated on